Sunday, June 14, 2015

மந்திரங்களும் அதன் அனுஷ்டானங்களும் – பாகம் – 3

மந்திரங்களும் அதன் அனுஷ்டானங்களும் – பாகம் – 3


கடந்த இரண்டு பாகங்களில் மூன்று உலகங்களை பார்த்தோம் .. அதில் சொல் உலகம் பற்றி பார்த்தோம் ..

ஆயின் மந்திரங்களின் "மூலம்" பற்றியும் அவற்றின் பரம புருஷ உறவு பற்றிய சிறு குறிப்பு இன்று பார்ப்போம் ...

வார்த்தைகளே மந்திரங்களாக எப்படி பரிமளிக்க முடியும் ??? நாம் சிறுவர்களாக இருந்த போது ஓம் க்ரீம் என்றல்லாம் சொல்லி இருக்கோமே அதெல்லாம் பலிக்க வில்லையே ஏன்??

எல்லா வார்த்தைகள் மந்திரங்கள் ஆகா, வட மொழியில் வாக்கு (Vak) சப்தம் (Sabda) இரண்டிற்கும் நிறைய வித்யாசங்கள் உள்ளன .. சப்தம் என்பது .. நீங்கள் ஒரு எலெக்ட்ரானிக் உபகரணம் மூலம் கேட்கும் மந்திரமாக கூட இருக்கலாம் ... வாக்கு என்பது ஒரு மனித மனதினால் செலுத்தப்படுவதாக இருக்க வேண்டும் ...

அது மூன்று விதமாக சொல்லப்படுகிறது ..

1. பர-வாக்கு – இறைவனின் வாக்கு ... ஸ்ருஷ்டி – கல்பனா ..
2. சூக்ஷும – வாக்கு இந்த வார்த்தைகள் .. நமக்கும் தேவர்களுக்கும் இடைய புரியப்படும் வார்த்தைகள்
3. ஸ்துல – வாக்கு ... இது நம்மை போன்ற மனிதர்களின் மன ஆசைகளின் வெளிப்பாடு ( எல்லா வார்த்தைகளும் மனிதர்களின் மன ஆசை என்று சாத்திரங்கள் சொல்லுகின்றன !!- ஆசை துறந்தவன் பேசுவதில்லை !!)

காலம் பொருள் கடந்த இறைவன் இந்த உலகை படைத்ததே            பர- வாக்கினால்தான் ... (நமது சனாதன தர்மத்தின் கருத்துகளில் சிறு துளியை கண்டு .. பழைய பைபிள் கருத்துக்களை பாருங்கள் ..

The Hebrew word for Light is “Aur.” Genesis says, “God said: let there be Light (Aur) and there was Light (Aur).” The Divine word is conceived of in the Hebrew Scriptures as having creative power...



அது வார்த்தையோ அல்லது சப்தமோ இல்லை "ஈஸ்ச்வர த்’வணி"...

இந்த உலகம் “உருவாக்கப்பட்டதாக சொல்லக்கூடாது  என்று.. நமது சாத்திரங்களை அறிந்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள் ஏன் என்றால் அது ஸ்ருஷ்டி ..

 ஒரு வித பரிணாமம் ...ஏன் என்றால் இந்த உலகம் தோன்றுவதற்கு முன்னும் அதற்கும் முன்பும் பொருள் இருக்கவில்லை .. இந்த உலகத்தை பரமபுருஷன் தன்னில் இருந்து உருவாக்கவில்லை (காரணம் அவன் ஒரு பொருளால் ஆனவன்  இல்லை )

"ஈஸ்ச்வர த்’வணி":-
அதுவே பரம புருஷனில் இருந்து வந்த சப்த பிரமம்... அதுவே நாம் காணும் உலகம் தோன்ற காரணி .. இந்த சப்த பிரும்மத்தை பற்றி கிரேக தத்துவ ஞானி பிளாடோ இது  பரமபுருஷனுக்கும் இந்த உலகிற்கும் இடைப்பட்ட காரணியாக சொல்வதை பார்ப்போம்!!
அதை அவர்கள்
Logoi என்று அழைக்கிறார் ..

According to Plato, the Logoi were super sensual primal images or patterns (Jāti) of visible things. it was the “Worldsoul” the uniting principle of all rational forces working in the world.
சப்த பிரம்மம் இந்த உலகின் ஆன்மா என்று சொல்லி இருக்கிறார் ...
கிரேக்க தத்துவ ஞானிகள் பலர் இதை பற்றி நிறைய பேசி இருக்கிறார்கள் அது நமக்கு இப்போது தேவை இல்லை .. (பாவம் அவர்களுக்கு நம்மை போன்று பிரயோகம் .. usage of manthras பற்றிய அறிவு இல்லை !!)

மூன்று உலகம் பற்றி பார்த்தோம் .. எப்படி இந்த உலகத்தை பரம புருஷன் சப்த பிரம்மம் மூலமாக உருவாக்கினான் என்று கண்டோம் ..

எப்படி பரமபுருஷன் ஒரு வாக்கினால் உலகை உண்டாக்கினானோ அதே வாக்கை கொண்டு நாமும் இந்த உலகை விட்டு நீங்கி அந்த பரமபுருஷனை அடைய முடியும் என்று கா'னங்கள் மூலம் செய்து காட்டியவர்கள் .. திருவையாறு தியாகராஜர் சுவாமிகள் ..

அட எனக்கு அதெல்லாம் இருக்கா என்ன .. இறைவனை அடையும் அவா?? என்ற கேள்விக்கு பதில் ...ஏதாவது பக்திப்பாடலை கேட்டால் கண்களில் உங்களை அறியாமல் கண்ணீர் வருமானால் .. உங்களால் நாதப்ரிம்மம் ஆகிய அந்த இறைவனை அடைய தயார் ஆகி விட்டீர் என்று தெரிந்து கொள்ளலாம் !!

நம்மால் பெருவாரியாக அறியப்படும் மந்திரம் என்பது சூக்ஷும வாக்குகளே !! இவைகளே நம்மையும் தேவர்களையும் இணைப்பது ... அதை பற்றி வரும் வாரங்களில் பார்ப்போம் ..

Saturday, June 6, 2015

மந்திரங்களும் அதன் அனுஷ்டானங்களும் – பாகம் – 2


மந்திரங்களும் அதன் அனுஷ்டானங்களும் பாகம் 2




முதல் பாகத்தில் மூன்று உலகங்களை பற்றி பார்த்தோம். இதில் பொருள் உலகம் புரியுது .. சொல் உலகம்னா ?? ஹாலிவூட்டு படம் மாறி கதவை திறந்து கிட்டு அங்கே போக முடியுமா என்று கேட்க வேண்டாம் .. நமது முப்பரிமான உலகில் அது வேறு ஒரு பரிமாணத்தில் ஊடுருவி வியாபித்து இருக்கும் ... அங்கே இருப்பவர்களை மந்திரங்களால் தொடர்பு கொண்டு மகிழ்வித்து நம் பொருள் உலக விசயங்களின் சில பல நிகழ்வுகளை சரி செய்ய முடியும் என்று அனைவரும் அறிவோம்..(கேள்விபட்டு இருக்கோம் என்று வேண சொல்லிக்கலாம் )

கொஞ்சம் விஞ்ஞானத்திற்குள் போய் பார்ப்போம் ..

காலமும் பொருள் உலகமும் +>  1930 களில் ஐன்ஸ்டீன்  சார்பியல் தத்துவத்தை
(theory of relativity ) சொல்வதற்கு முன்பே பல ஆயிரம் வருடமாக நமக்கு ஒரு விசயம் தெரியும் .. காலம் சார்புடையது .. நீங்கள் எந்த உலகில் இருக்கிறீர்களோ அந்த இடத்திற்கு தகுந்த மாறி இருக்கும் என்று .. நமது பூமியின் பல கோடி வருடம் நம்மை படைத்த பிரும்மாவிற்கு ஒரு பகல் என்று அறிந்திருந்தோம் ..

இதற்கு பல கிராமத்து கதைகளில் இருந்து வேத வாக்கியங்கள் வரை பல பிரமாணங்கள் உள்ளன ..(தரமுடியாத வரம் கேட்டவனிடம் பிரும்மா இதோ ஒரு நொடியில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஓடிய கதை )

இதில் சொல் உலகம்.. அதற்க்கு மேலான  ஒளி உலகம் இவைகளுக்கும் கால அளவு உண்டு அதில் இருப்பவர்களுக்கு (தேவர்கள், பல தேவதாஸ்வரூபங்கள் இவைகளுக்கும் காலம் உண்டு ) இவைகளின் கால அளவுகள் பிரும்மாவின் சதுர் யுகம், மஹா விஷ்ணுவிற்கு ஒரு நாள்  என்பது போல..






காகபுஜண்டர் என்னும் சித்தர் பாடுகிறார் :-


“ஆச்சப்பா எத்தனையோ கோடி காலம்
அந்தந்த பிரளயத்திற்கு அதுவாய் நின்றேன்
மூவர் எழுபிறப்பும் யாம் அறிவோம்”

இந்த உலகங்கள் மூன்று மட்டும்தான்  என்று நாம் நினைக்கிறோம் ஆனால் நீங்கள் இப்போது படித்துக்கொண்டு இருக்கும் கம்ப்யூட்டர் மற்றும் போன்
printed cirucit board இல்  எவ்வளவு தொடர்புகள் இருக்குமோ அதை விட பல கோடி அடுக்குகள் (layers) மற்றும்  பல கால அளவுகள் கொண்டு  இருக்க கூடும் .. அவைகளில் ஒன்றுக்கு ஒன்று பல தொடர்புகள்  உள்ளதாக இருக்கும் ..

எனவே இந்த பொருள் உலகம் தாண்டினால் காலத்தின் அளவுகள் மாறுவதும் அது வேறு ஒரு பரிமாணத்தில் இருப்பதும்
(different dimension than our three dimensional world ) அறியலாம் .

இந்த பொருள் உலகில் உள்ள அனைத்து விஷயங்களுக்கும் குணங்கள் உண்டு .. உதாரணமாக .. ஒரு பாட்டில் தேன் .. அதற்கு இனிப்பு சுவை உண்டு .. பொருள் சாராத உலகத்தை சேர்ந்த அந்த தேவதையால் தேனை நேரடியாக  நாவினால் சுவைத்து வயற்றினால் ஜீரணிக்க முடியாது .. ஆனால் அவர்களால் (தேவர்களால்)  அந்த தேனின் முழு இனிப்பை அதில் இருந்து எடுத்து விட முடியும் (எனக்கு தெரிந்த ஒரு மந்திரவாதி படையலில் சீல் உடைக்கப்படாத பிராண்டி பாட்டிலை படையல் இட்டு குடுப்பார் .. வெறும் தண்ணீர் போன்று இருக்கும் )



ஆயின் இதில் ஒரு விஷயம் உண்டு .. பிதுர்க்கள் மற்றும் அவர்களை விட கீழான  ஏவல் தேவதைகள் இவ்வாறு வஸ்துவின் ரசத்தை மட்டுமே சுவீகரிக்கும்.

நாம் வழிபடும் மேலான தேவதாஸ்வரூபங்கள் அந்த வஸ்துவையே, பொருளாகவும், அதன் சுவையையும் குறைத்தும்.. சில சமயங்களில் அந்த பொருளின் குணத்தை கூட்டவும் முடியும் !!
.
இதில் எப்படி அவர்களை தொடர்பு கொள்ள வைப்பது என்பதில்தான் சூக்ஷமம் உள்ளது. 

சரி நாம் குடுக்கும் படையல்களை அவனுக்கு எப்படி குடுப்பது இரண்டு விதமான விதமாக  அதை செய்யாலாம் .

1. மந்திரங்களினால், மனதினால் வரித்து ..
2. ஹோமங்களில் அகினி மூலமாக

1.. ஒவ்வொரு மனிதன் உடலிலும் உள்ள பல அக்னிகளை தூண்டி “தன் உடம்பின் மூலமாக” (அர்ச்சாவதார மூர்த்தங்களை ஆராதனை செய்யும் அர்ச்சகர்கள் சொல்லும் மந்திரங்கள் மூலம் இதை அறியலாம் .. அதனாலே அவர்களுக்கு மிகுந்த கட்டுப்பாடுகள் உண்டு .. அவர்கள் மூலமாகவே அந்த தேவதைகள் பூர்பார்சவம் பெறுகின்றன, அதனால்தான் கேரளாவில் அர்ச்சர்கர்கள் அவ்வளவு மடியாக உள்ளனர் )

 அந்த தேவதையை இந்த பொருள் உலகின் உள்ளே இறக்கி அதன் மூலமாக இந்த பூமியில் உள்ள பொருள்களின் குணங்களை மாற்றங்கள் உண்டு பண்ண முடியும்..

அதாவது படைக்கப்பட்ட உணவின் சுவையை முழுவதுமாக எடுத்தல்
பல வினோதமான கால அளவுகளில் நாம் விரும்பும் விசயங்களை நிகழ்த்துதல் ..செய்தி உரைத்தல் போன்ற பல விசயங்களை செய்விக்க முடியும் ..(இத்தகைய, பல மகான்கள் செய்த, அற்புதங்களை நீங்கள் படித்து இருப்பீர்கள் )
2.  தேவர்களில் கீழானவன் அக்னி என்றும் மேலானவன் விஷ்ணு என்று வேத வாக்கியங்கள் கூறுகின்றன .. அதனால் அக்னியே இவர்கள் அனைவரின் ஹவிசுகள் .. அவர்களுக்கு அளிக்கப்படும் பொருள் உலகின் ஹவிசுகளை தன் தீக்கணைகளால் பொசுக்கி அதை தன்னை விட மேலான தேவர்களுக்கும் தெய்வங்களுக்கும் எடுத்து செல்கிறான் ..


இந்த இரண்டு  முறையிலும் மந்திர அனுஷ்டானம் மிக மிக அவசியம் ..


இன்று “வர்ணமாலா” என்கின்ற ஒரு அபூர்வமான க்ரந்தம் ஒன்று கிடைத்துள்ளது .. அதில் உள்ள விசயங்களை படித்து மேலும் பல விசயங்களை பகிர உள்ளேன் .. அதனால் மூன்றாம் பாகம் வரும் வார கடைசியில் வரும் ..

அதுவரை .. உங்களுக்கு உள்ள கேள்விகளை கேளுங்கள் அதற்கு பதில் அளிக்கப்படும்

விஜயராகவன் கிருஷ்ணன்





Friday, June 5, 2015

மந்திரங்களும் அதன் அனுஷ்டானங்களும் – பாகம் – 1


மந்திரங்களும் அதன் அனுஷ்டானங்களும் பாகம் 1




சமீபத்தில் மிக அருமையா ஒரு பதிவு ஒன்றை என் நண்பர் எனக்கு அனுப்பினார் இந்த விஷயம் பற்றி .. அதை அப்படியே பதிவிட்டால் படிப்பது மிகவும் கடினமாக இருக்கும்....

முதலில் எனக்கு வடமொழியில் புலமை பூஜ்யமே .. ஆயின் அரங்கன் அருளால் கிடைத்த என் குருநாதர் இவை அனைத்தையும் விளக்க அளிக்க கூடியவராக அமைத்தார் ..

மந்திரங்களை பற்றி முதலில் அறிவதற்கு முன் நமது பிரபஞ்சம் மூன்று விதமான காரணிகளால் ஆக்கப்பட்டதை அறிய வேண்டும்..

1. பொருள் பிரபஞ்சம் => material world .. three diamentional form which we see and feel and hear and smell and taste and what not!!

2. சொல் பிரபஞ்சம் :-  Phonetic world ... this is the world of manthras ..   ஒவ்வொரு தேவதைகளையும் நாம் அழைக்கும் பீஜ எழுத்துக்கள்.. அவைகளை தொடர்பு கொள்ள அக்ஷரங்கள் ..(நமது இறை நாமங்கள் எல்லாமே மந்திரங்கள்தான் ... ராமா , கிருஷ்ணா , சிவ , முருகா )

ஒலி எல்லாம் கூடினால் உண்டாகும் ஓம் என்கிற பிரணவத்தில்  முடியும் இந்த உலகின் எல்லை ... பிரணவ சித்தி ஏற்பட்டால் நீங்கள் மனதளவில் இந்த உலகை கடந்து விட்டீர்கள் (அப்படீனா என்ன என்று பின்பு பார்ப்போம்)  

நாம் காணும் அனைத்து நாம ரூப உள்ள எல்லா தேவதைகளையும் இந்த உலகில் உண்டான மந்திரங்கள் மூலமாக  தொடர்பு கொள்ள முடியும் ...

3. ஒளிப்பிரபஞ்சம் :- இந்த பிரபஞ்சம் பற்றிய விசயங்களை சிறிது குழப்பமானது .. இது சொல் உலகத்தின் மேலானது (ஒரு பந்தின் உள்ளே உள்ள பந்தாக இதை கொள்ள வேண்டும் !!) இது தான் வெளி கூடு !!

மேலே சொன்ன மூன்று உலகங்களை பற்றி நமது ரிஷிகள் தங்களின் தவ வலிமை மூலமாக உணர்ந்து நெறி படுத்தி இருக்கிறார்கள் ..

சொல் உலகில் உள்ள காயத்திரி தேவதை பற்றிய விசயங்களை விஸ்வாமித்ரா மகரிஷி கண்டுபிடித்து சொன்னதை நாம் அறிவோம்



ஒளி உலகம் .. இது  விளக்குவதற்கு கஷ்டமான விசயம் .. இருப்பினும் ஒரு கோடு போட்டு காட்டுவோம் ..

எந்த கோவிலுக்கு போனானாலும் .. ஒரு நிறைய செவ்வகம், சதுரம், பத்மம் (தாமரை இதழ் ) பதிவு செய்த ஒரு தகடை பார்த்து இருப்பீர்கள் .. அதன் பெயர் இயந்திரம் என்று சொல்லி இருப்பார்கள் !!

ஒவ்வொரு சாமிக்கும் ஒரு எந்திரம்!! அதன் உள்ளே நாம் மேல சொன்ன மந்திர எழுத்துக்கள் (பீஜங்கள் )


இந்த geometry lines எல்லாம் ஒரு முப்பரிமான லேசர் கோடுகளாக தெரிந்தால் எப்படி இருக்கும்?? ஒரு கற்பனை பண்ணி பாருங்க .. அதுதான் ஒளி பிரபஞ்சம் !! star war படங்களில் பல கோடுகள் நடுவில் பயணம் போன்று .. தூரமோ காலமோ இல்லாத அந்த ஒளி உலகில் பயணித்து (மனத்தால் ) நம் ரிஷிகள் உருவாகியதுதான் இயந்திரங்கள் .. அது இன்று கேவலமான கடை சரக்கானது கொடுமை !!


மகா மேரு என்று ஒன்று பார்த்து இருப்பீர்கள் அதுவே முப்பரிமான ஒரு இயந்திரம் அதையே ஒரு லேசெர் ஒளி கொண்ட பல கோடி கிலோ மீட்டர் நீள அகல மாக கனவில் கண்டால் உங்களால் அதை வணங்க கூட முடியாது !! (இன்று 300 ரூபாய்க்கு வாங்கி வீட்டில் வைத்து இருக்கிறார்கள் ).. இப்படி வைத்து இருப்பது மடமை என்று பின்பு பார்ப்போம்

மூன்று உலகையும்  தாண்டி ஒரு சூன்யம் அதை தாண்டி நாம் அடைய வேண்டிய பரம புருஷன் இருக்கிறான்!!!

“ முப்பாழும் பாழாய் முடிவில் ஒரு சூனியமாய்
  அப்பாழும் பாழாய் அமர்ந்ததே சிவாயமே “

என்று சிவவாக்கியர் சொல்லுகிறார் !!!

சரி மந்திர ஜபம் பண்ணி தேவதைகளை திருப்தி பண்ணி .. அதெல்லாம் நாம் பண்ணாலாமா??? அதற்க்கு நம் மதத்தில் இடம் உள்ளதா என்றால் ..

   இந்த உலகில் உள்ள அனைத்து தேவதைகளும் அதற்க்கு கீழான நமது பொருள் உலகை ரக்ஷிப்பர்கள் என்று கிருஷ்ணன் கீதையில் சொல்லி இருக்கிறார் ..



பகவத்கீதை
| கர்ம யோகம்

11. தேவாந்பாவயதாநேந தே தேவா பாவயந்து வ:

பரஸ்பரம் பாவயந்த: ஸ்ரேய: பரமவாப்ஸ்யத
“அநேந தேவாந் பாவயத-இதனால் தேவர்களைக் கருதக் கடவீர், தே தேவா வ: பாவயந்து-அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர், பரஸ்பரம் பாவயந்த:-பரஸ்பரமான பாவனை செய்வதனால், பரம் ஸ்ரேய:-உயர்ந்த நலத்தை, அவாப்ஸ்யத-எய்துவீர்கள்.”
பொருள் : இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்; அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர். (இங்ஙனம்) பரஸ்பரமான பாவனை செய்வதனால் உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்.(இது தினமலர் பதிப்பு)
முன்பே சொன்னது போன்று எனது வடமொழி அறிவு பூஜ்யமாக இருக்கலாம் ஆயின் இந்த ஸ்லோகத்தில் கிருஷ்ணன் மிக தெளிவாக ஒன்று சொல்லுகிறார்..

நீங்கள் மேலே உள்ள தேவர்களை ப்ரீத்தி செய்யுங்கள் அவர்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வார்கள் .. இது ஒரு பரஸ்பர தேவை என்று!! ..சுவாமி சித்பவானந்தர் (திருப்பராய்துறை ராமகிருஷ்ண தபோவனம்) உரையில் இப்படி எழுதி இருக்கார்

இப்படி பல தேவதைகளை மந்திரங்கள் மூலமாகவும் ஹோமங்கள் மூலமாகவும் நாம் திருப்தி படுத்தி அனுமதி இருப்பது கர்மயோகத்தின் படி அனுமதிக்கப்பட்டுள்ளது ..

சரி அவங்க எப்படி ஐயா  நம்மளை திருப்தி பண்ணமுடியும் . நம்ம எதுக்கு அவங்களை திருப்தி பண்ணனும் ??

நாம் முன்பே பார்த்த மூன்று உலகங்களில் .. மனிதன் பொருள் உலகில் வாழ்கிறான் .. நமக்கு மேலான தேவர்கள், நாம் வணங்கும் தெய்வங்கள் அவர்களின் நிலை காரணமாக .. சொல் பிரபஞ்சத்திலும் (அதிலும் பல நிலைகள் ) அதற்க்கு மேலான ஒளி உலகத்திலும் வசிப்பார்கள் !!!


சரி மேலே உள்ள அந்த தேவர்களுக்கு நம்மிடம் என்ன வேண்டும்?? அவர்கள் நம் உலகில் நமக்கு என்ன அளிக்க முடியும் .. கிருஷ்ணர் நீங்கள் இருவரும் பரஸ்பரம் உதவிக்கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறாரே ..

---- நாளை பார்ப்போம்