Friday, June 5, 2015

மந்திரங்களும் அதன் அனுஷ்டானங்களும் – பாகம் – 1


மந்திரங்களும் அதன் அனுஷ்டானங்களும் பாகம் 1




சமீபத்தில் மிக அருமையா ஒரு பதிவு ஒன்றை என் நண்பர் எனக்கு அனுப்பினார் இந்த விஷயம் பற்றி .. அதை அப்படியே பதிவிட்டால் படிப்பது மிகவும் கடினமாக இருக்கும்....

முதலில் எனக்கு வடமொழியில் புலமை பூஜ்யமே .. ஆயின் அரங்கன் அருளால் கிடைத்த என் குருநாதர் இவை அனைத்தையும் விளக்க அளிக்க கூடியவராக அமைத்தார் ..

மந்திரங்களை பற்றி முதலில் அறிவதற்கு முன் நமது பிரபஞ்சம் மூன்று விதமான காரணிகளால் ஆக்கப்பட்டதை அறிய வேண்டும்..

1. பொருள் பிரபஞ்சம் => material world .. three diamentional form which we see and feel and hear and smell and taste and what not!!

2. சொல் பிரபஞ்சம் :-  Phonetic world ... this is the world of manthras ..   ஒவ்வொரு தேவதைகளையும் நாம் அழைக்கும் பீஜ எழுத்துக்கள்.. அவைகளை தொடர்பு கொள்ள அக்ஷரங்கள் ..(நமது இறை நாமங்கள் எல்லாமே மந்திரங்கள்தான் ... ராமா , கிருஷ்ணா , சிவ , முருகா )

ஒலி எல்லாம் கூடினால் உண்டாகும் ஓம் என்கிற பிரணவத்தில்  முடியும் இந்த உலகின் எல்லை ... பிரணவ சித்தி ஏற்பட்டால் நீங்கள் மனதளவில் இந்த உலகை கடந்து விட்டீர்கள் (அப்படீனா என்ன என்று பின்பு பார்ப்போம்)  

நாம் காணும் அனைத்து நாம ரூப உள்ள எல்லா தேவதைகளையும் இந்த உலகில் உண்டான மந்திரங்கள் மூலமாக  தொடர்பு கொள்ள முடியும் ...

3. ஒளிப்பிரபஞ்சம் :- இந்த பிரபஞ்சம் பற்றிய விசயங்களை சிறிது குழப்பமானது .. இது சொல் உலகத்தின் மேலானது (ஒரு பந்தின் உள்ளே உள்ள பந்தாக இதை கொள்ள வேண்டும் !!) இது தான் வெளி கூடு !!

மேலே சொன்ன மூன்று உலகங்களை பற்றி நமது ரிஷிகள் தங்களின் தவ வலிமை மூலமாக உணர்ந்து நெறி படுத்தி இருக்கிறார்கள் ..

சொல் உலகில் உள்ள காயத்திரி தேவதை பற்றிய விசயங்களை விஸ்வாமித்ரா மகரிஷி கண்டுபிடித்து சொன்னதை நாம் அறிவோம்



ஒளி உலகம் .. இது  விளக்குவதற்கு கஷ்டமான விசயம் .. இருப்பினும் ஒரு கோடு போட்டு காட்டுவோம் ..

எந்த கோவிலுக்கு போனானாலும் .. ஒரு நிறைய செவ்வகம், சதுரம், பத்மம் (தாமரை இதழ் ) பதிவு செய்த ஒரு தகடை பார்த்து இருப்பீர்கள் .. அதன் பெயர் இயந்திரம் என்று சொல்லி இருப்பார்கள் !!

ஒவ்வொரு சாமிக்கும் ஒரு எந்திரம்!! அதன் உள்ளே நாம் மேல சொன்ன மந்திர எழுத்துக்கள் (பீஜங்கள் )


இந்த geometry lines எல்லாம் ஒரு முப்பரிமான லேசர் கோடுகளாக தெரிந்தால் எப்படி இருக்கும்?? ஒரு கற்பனை பண்ணி பாருங்க .. அதுதான் ஒளி பிரபஞ்சம் !! star war படங்களில் பல கோடுகள் நடுவில் பயணம் போன்று .. தூரமோ காலமோ இல்லாத அந்த ஒளி உலகில் பயணித்து (மனத்தால் ) நம் ரிஷிகள் உருவாகியதுதான் இயந்திரங்கள் .. அது இன்று கேவலமான கடை சரக்கானது கொடுமை !!


மகா மேரு என்று ஒன்று பார்த்து இருப்பீர்கள் அதுவே முப்பரிமான ஒரு இயந்திரம் அதையே ஒரு லேசெர் ஒளி கொண்ட பல கோடி கிலோ மீட்டர் நீள அகல மாக கனவில் கண்டால் உங்களால் அதை வணங்க கூட முடியாது !! (இன்று 300 ரூபாய்க்கு வாங்கி வீட்டில் வைத்து இருக்கிறார்கள் ).. இப்படி வைத்து இருப்பது மடமை என்று பின்பு பார்ப்போம்

மூன்று உலகையும்  தாண்டி ஒரு சூன்யம் அதை தாண்டி நாம் அடைய வேண்டிய பரம புருஷன் இருக்கிறான்!!!

“ முப்பாழும் பாழாய் முடிவில் ஒரு சூனியமாய்
  அப்பாழும் பாழாய் அமர்ந்ததே சிவாயமே “

என்று சிவவாக்கியர் சொல்லுகிறார் !!!

சரி மந்திர ஜபம் பண்ணி தேவதைகளை திருப்தி பண்ணி .. அதெல்லாம் நாம் பண்ணாலாமா??? அதற்க்கு நம் மதத்தில் இடம் உள்ளதா என்றால் ..

   இந்த உலகில் உள்ள அனைத்து தேவதைகளும் அதற்க்கு கீழான நமது பொருள் உலகை ரக்ஷிப்பர்கள் என்று கிருஷ்ணன் கீதையில் சொல்லி இருக்கிறார் ..



பகவத்கீதை
| கர்ம யோகம்

11. தேவாந்பாவயதாநேந தே தேவா பாவயந்து வ:

பரஸ்பரம் பாவயந்த: ஸ்ரேய: பரமவாப்ஸ்யத
“அநேந தேவாந் பாவயத-இதனால் தேவர்களைக் கருதக் கடவீர், தே தேவா வ: பாவயந்து-அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர், பரஸ்பரம் பாவயந்த:-பரஸ்பரமான பாவனை செய்வதனால், பரம் ஸ்ரேய:-உயர்ந்த நலத்தை, அவாப்ஸ்யத-எய்துவீர்கள்.”
பொருள் : இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்; அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர். (இங்ஙனம்) பரஸ்பரமான பாவனை செய்வதனால் உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்.(இது தினமலர் பதிப்பு)
முன்பே சொன்னது போன்று எனது வடமொழி அறிவு பூஜ்யமாக இருக்கலாம் ஆயின் இந்த ஸ்லோகத்தில் கிருஷ்ணன் மிக தெளிவாக ஒன்று சொல்லுகிறார்..

நீங்கள் மேலே உள்ள தேவர்களை ப்ரீத்தி செய்யுங்கள் அவர்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வார்கள் .. இது ஒரு பரஸ்பர தேவை என்று!! ..சுவாமி சித்பவானந்தர் (திருப்பராய்துறை ராமகிருஷ்ண தபோவனம்) உரையில் இப்படி எழுதி இருக்கார்

இப்படி பல தேவதைகளை மந்திரங்கள் மூலமாகவும் ஹோமங்கள் மூலமாகவும் நாம் திருப்தி படுத்தி அனுமதி இருப்பது கர்மயோகத்தின் படி அனுமதிக்கப்பட்டுள்ளது ..

சரி அவங்க எப்படி ஐயா  நம்மளை திருப்தி பண்ணமுடியும் . நம்ம எதுக்கு அவங்களை திருப்தி பண்ணனும் ??

நாம் முன்பே பார்த்த மூன்று உலகங்களில் .. மனிதன் பொருள் உலகில் வாழ்கிறான் .. நமக்கு மேலான தேவர்கள், நாம் வணங்கும் தெய்வங்கள் அவர்களின் நிலை காரணமாக .. சொல் பிரபஞ்சத்திலும் (அதிலும் பல நிலைகள் ) அதற்க்கு மேலான ஒளி உலகத்திலும் வசிப்பார்கள் !!!


சரி மேலே உள்ள அந்த தேவர்களுக்கு நம்மிடம் என்ன வேண்டும்?? அவர்கள் நம் உலகில் நமக்கு என்ன அளிக்க முடியும் .. கிருஷ்ணர் நீங்கள் இருவரும் பரஸ்பரம் உதவிக்கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறாரே ..

---- நாளை பார்ப்போம்








No comments:

Post a Comment