Saturday, June 6, 2015

மந்திரங்களும் அதன் அனுஷ்டானங்களும் – பாகம் – 2


மந்திரங்களும் அதன் அனுஷ்டானங்களும் பாகம் 2




முதல் பாகத்தில் மூன்று உலகங்களை பற்றி பார்த்தோம். இதில் பொருள் உலகம் புரியுது .. சொல் உலகம்னா ?? ஹாலிவூட்டு படம் மாறி கதவை திறந்து கிட்டு அங்கே போக முடியுமா என்று கேட்க வேண்டாம் .. நமது முப்பரிமான உலகில் அது வேறு ஒரு பரிமாணத்தில் ஊடுருவி வியாபித்து இருக்கும் ... அங்கே இருப்பவர்களை மந்திரங்களால் தொடர்பு கொண்டு மகிழ்வித்து நம் பொருள் உலக விசயங்களின் சில பல நிகழ்வுகளை சரி செய்ய முடியும் என்று அனைவரும் அறிவோம்..(கேள்விபட்டு இருக்கோம் என்று வேண சொல்லிக்கலாம் )

கொஞ்சம் விஞ்ஞானத்திற்குள் போய் பார்ப்போம் ..

காலமும் பொருள் உலகமும் +>  1930 களில் ஐன்ஸ்டீன்  சார்பியல் தத்துவத்தை
(theory of relativity ) சொல்வதற்கு முன்பே பல ஆயிரம் வருடமாக நமக்கு ஒரு விசயம் தெரியும் .. காலம் சார்புடையது .. நீங்கள் எந்த உலகில் இருக்கிறீர்களோ அந்த இடத்திற்கு தகுந்த மாறி இருக்கும் என்று .. நமது பூமியின் பல கோடி வருடம் நம்மை படைத்த பிரும்மாவிற்கு ஒரு பகல் என்று அறிந்திருந்தோம் ..

இதற்கு பல கிராமத்து கதைகளில் இருந்து வேத வாக்கியங்கள் வரை பல பிரமாணங்கள் உள்ளன ..(தரமுடியாத வரம் கேட்டவனிடம் பிரும்மா இதோ ஒரு நொடியில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஓடிய கதை )

இதில் சொல் உலகம்.. அதற்க்கு மேலான  ஒளி உலகம் இவைகளுக்கும் கால அளவு உண்டு அதில் இருப்பவர்களுக்கு (தேவர்கள், பல தேவதாஸ்வரூபங்கள் இவைகளுக்கும் காலம் உண்டு ) இவைகளின் கால அளவுகள் பிரும்மாவின் சதுர் யுகம், மஹா விஷ்ணுவிற்கு ஒரு நாள்  என்பது போல..






காகபுஜண்டர் என்னும் சித்தர் பாடுகிறார் :-


“ஆச்சப்பா எத்தனையோ கோடி காலம்
அந்தந்த பிரளயத்திற்கு அதுவாய் நின்றேன்
மூவர் எழுபிறப்பும் யாம் அறிவோம்”

இந்த உலகங்கள் மூன்று மட்டும்தான்  என்று நாம் நினைக்கிறோம் ஆனால் நீங்கள் இப்போது படித்துக்கொண்டு இருக்கும் கம்ப்யூட்டர் மற்றும் போன்
printed cirucit board இல்  எவ்வளவு தொடர்புகள் இருக்குமோ அதை விட பல கோடி அடுக்குகள் (layers) மற்றும்  பல கால அளவுகள் கொண்டு  இருக்க கூடும் .. அவைகளில் ஒன்றுக்கு ஒன்று பல தொடர்புகள்  உள்ளதாக இருக்கும் ..

எனவே இந்த பொருள் உலகம் தாண்டினால் காலத்தின் அளவுகள் மாறுவதும் அது வேறு ஒரு பரிமாணத்தில் இருப்பதும்
(different dimension than our three dimensional world ) அறியலாம் .

இந்த பொருள் உலகில் உள்ள அனைத்து விஷயங்களுக்கும் குணங்கள் உண்டு .. உதாரணமாக .. ஒரு பாட்டில் தேன் .. அதற்கு இனிப்பு சுவை உண்டு .. பொருள் சாராத உலகத்தை சேர்ந்த அந்த தேவதையால் தேனை நேரடியாக  நாவினால் சுவைத்து வயற்றினால் ஜீரணிக்க முடியாது .. ஆனால் அவர்களால் (தேவர்களால்)  அந்த தேனின் முழு இனிப்பை அதில் இருந்து எடுத்து விட முடியும் (எனக்கு தெரிந்த ஒரு மந்திரவாதி படையலில் சீல் உடைக்கப்படாத பிராண்டி பாட்டிலை படையல் இட்டு குடுப்பார் .. வெறும் தண்ணீர் போன்று இருக்கும் )



ஆயின் இதில் ஒரு விஷயம் உண்டு .. பிதுர்க்கள் மற்றும் அவர்களை விட கீழான  ஏவல் தேவதைகள் இவ்வாறு வஸ்துவின் ரசத்தை மட்டுமே சுவீகரிக்கும்.

நாம் வழிபடும் மேலான தேவதாஸ்வரூபங்கள் அந்த வஸ்துவையே, பொருளாகவும், அதன் சுவையையும் குறைத்தும்.. சில சமயங்களில் அந்த பொருளின் குணத்தை கூட்டவும் முடியும் !!
.
இதில் எப்படி அவர்களை தொடர்பு கொள்ள வைப்பது என்பதில்தான் சூக்ஷமம் உள்ளது. 

சரி நாம் குடுக்கும் படையல்களை அவனுக்கு எப்படி குடுப்பது இரண்டு விதமான விதமாக  அதை செய்யாலாம் .

1. மந்திரங்களினால், மனதினால் வரித்து ..
2. ஹோமங்களில் அகினி மூலமாக

1.. ஒவ்வொரு மனிதன் உடலிலும் உள்ள பல அக்னிகளை தூண்டி “தன் உடம்பின் மூலமாக” (அர்ச்சாவதார மூர்த்தங்களை ஆராதனை செய்யும் அர்ச்சகர்கள் சொல்லும் மந்திரங்கள் மூலம் இதை அறியலாம் .. அதனாலே அவர்களுக்கு மிகுந்த கட்டுப்பாடுகள் உண்டு .. அவர்கள் மூலமாகவே அந்த தேவதைகள் பூர்பார்சவம் பெறுகின்றன, அதனால்தான் கேரளாவில் அர்ச்சர்கர்கள் அவ்வளவு மடியாக உள்ளனர் )

 அந்த தேவதையை இந்த பொருள் உலகின் உள்ளே இறக்கி அதன் மூலமாக இந்த பூமியில் உள்ள பொருள்களின் குணங்களை மாற்றங்கள் உண்டு பண்ண முடியும்..

அதாவது படைக்கப்பட்ட உணவின் சுவையை முழுவதுமாக எடுத்தல்
பல வினோதமான கால அளவுகளில் நாம் விரும்பும் விசயங்களை நிகழ்த்துதல் ..செய்தி உரைத்தல் போன்ற பல விசயங்களை செய்விக்க முடியும் ..(இத்தகைய, பல மகான்கள் செய்த, அற்புதங்களை நீங்கள் படித்து இருப்பீர்கள் )
2.  தேவர்களில் கீழானவன் அக்னி என்றும் மேலானவன் விஷ்ணு என்று வேத வாக்கியங்கள் கூறுகின்றன .. அதனால் அக்னியே இவர்கள் அனைவரின் ஹவிசுகள் .. அவர்களுக்கு அளிக்கப்படும் பொருள் உலகின் ஹவிசுகளை தன் தீக்கணைகளால் பொசுக்கி அதை தன்னை விட மேலான தேவர்களுக்கும் தெய்வங்களுக்கும் எடுத்து செல்கிறான் ..


இந்த இரண்டு  முறையிலும் மந்திர அனுஷ்டானம் மிக மிக அவசியம் ..


இன்று “வர்ணமாலா” என்கின்ற ஒரு அபூர்வமான க்ரந்தம் ஒன்று கிடைத்துள்ளது .. அதில் உள்ள விசயங்களை படித்து மேலும் பல விசயங்களை பகிர உள்ளேன் .. அதனால் மூன்றாம் பாகம் வரும் வார கடைசியில் வரும் ..

அதுவரை .. உங்களுக்கு உள்ள கேள்விகளை கேளுங்கள் அதற்கு பதில் அளிக்கப்படும்

விஜயராகவன் கிருஷ்ணன்





No comments:

Post a Comment